Helpful Options

Transpose                                                
Showing posts with label Thiruvirundhu. Show all posts
Showing posts with label Thiruvirundhu. Show all posts

Wednesday, June 1, 2016

Thiruvirundhu - அன்பின் தேவ நற்கருணையிலே



Starting Note: Bb    Scale: Bb


    Bb      Eb        F          B    
அன்பின் தேவ நற்கருணையிலே


    Gm       Dm      Gm   Bb
 அழியாப் புகழோடு வாழ்பவரே


   Bb                    F       Eb  Cm Bb
அன்புப் பாதையில் வழி நடந்தே


   Eb           Cm           F           B
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர் - 2


Verse 1


   Bb   F       Bb         
அற்புதமாக எமைப் படைத்தீர்


             F      Bb    D
தற்பரன் நீரே எமை மீட்டீர்


                  Gm                Eb
பொற்புடன் அப்ப இரச குணத்தில்


            Dm            C           F  
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்


   Bb                      Dm      Gm
எத்தனை வழிகளில் உமதன்பை


  Bb         Cm            F        Bb
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்


Verse 2


கல்வாரி மலையின் சிகரமதில்


கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்


நற்கருணை விசுவாசமதில்


நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்


இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்

யாவரும் வாழத் தயைபுரிவீர்

Saturday, May 14, 2016

4.Thiruvirundhal - 0433. என்னகம் இணைய இறைவன் வந்தார்

0433. என்னகம் இணைய இறைவன் வந்தார்
Scale: Dm    Starting Note: A


 Dm                          C             Dm
என்னகம் இணைய இறைவன் வந்தார்
 Dm                    C   Dm
இதயம் மகிழ்ந்து பாடுதே (2)
           F                                 C
அவர் இருளை நீக்கி எந்தன் வாழ்வில்
       Bb          Dm
நல் ஒளியை ஏற்றவே (2)
            C                        Bb
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம் அவரை
   C               Bb            Dm
இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்
            F                         C
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம் அவரை
   C               Bb            Dm
இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்


       Dm                                          C
1. மனிதம் காத்திட மன்னாவைப் பொழிந்தார்
  G                                    Dm
புனிதம் ஓங்கிட என்றுமே தந்தார் (2)
  Gm                                    Dm
உன்னை உணவாக உள்ளம் நானேற்று
                C                        Dm
ஒளியாக உறவாக நீ என்னில் வா - இயேசுவை ...


2. உந்தன் அன்பினில் நானென்றும் நிலைக்க
எந்தன் உறவாய் இறையரசைக் காக்க (2)
உன்னை உணவாக...

Sunday, April 10, 2016

Thiruvirundhu - 0425. என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

0425. என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
http://www.bibleintamil.com/iraialai/s0425.htm
Starting Note: D
Scale: G


 G
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
                         Am       D
இறைவா என் உள்ளம் வருவாய்
 G  
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
                        Am        D
தலைவா நீ உன்னைத் தருவாய்
 G                          Em              G      Em
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
 C              Em             C             G
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
 G
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
                         Am       D
இறைவா என் உள்ளம் வருவாய்


     G
1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
                 C         Em
நீதானே நீதானே இறைவா
G
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
                       C         Em
தருவாயே தருவாயே தலைவா
 G                            D     G
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
 G                           D         G
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே (2)
 C              Am          Em            G
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே (2)
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

Sunday, March 13, 2016

4 - Thiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்

Thiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்

Starting Note: F#     Scale: B
Link: https://www.youtube.com/watch?v=GGly_Jj7glg&index=4&list=PLQciOBTlOJHl89gHNZQ9ZmZ3lHmBe3Xk1

B                                   E
சந்தோஷம்  ஆ ஆ ஆ சந்தோஷம்
F#                                   B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்
B                                   E
சந்தோஷம்  ஆ ஆ ஆ சந்தோஷம்
F#                                   B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS
 B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்
                   F#                      E
பாவி நான் விடுதலை பெற்ற சந்தோஷம்
  C#m                               C#m
சந்தோஷம் வாழ்வில்  சந்தோஷம்
   F#                                             B
துன்பங்கள் எனை விட்டு நீங்கிய சந்தோஷம்


CHORUS


Interlude


 B
கர்த்தரின் கருணையில் களிப்புடன் வாழ
 D#m                       E
கவலைகள் நீங்கிய சந்தோஷம்
 E                                   Ab      Dbm
அவரின் அனைப்பினில் அன்புடன் வாழ
  F#                                B
அல்லல்கள் அடங்கிய சந்தோஷம் - 2


  B                              F#
நாதனின் நட்பினில் நாளெல்லாம் வாழ
  F#                              B
நம்பிக்கை குறையாத சந்தோஷம்  - 2


   B                                            E
தேவனின் கிருபையால் தேவைகள் நீங்க
  F#                              B
தேற்றிடும் தேவனில் சந்தோஷம்


   F#                             B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS


Interlude


உலக ஆசைகள் என்னை விட்டு நீங்க
உத்தமர் இயேசுவில் சந்தோஷம்
உயிரை கொள்ளும் நோய் விட்டு நீங்க
உயிர்த்த இயேசுவில் சந்தோஷம் - 2


பரிசுத்த கீதங்கள் நாள்தோறும் பாட
பரிசுத்த ஆவியில் சந்தோஷம் - 2


பரிசுத்த ஆவியில் நான் நிறைந்து கானையில்  
பரமன் இயேவுக்குள் சந்தோஷம்


சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS

Saturday, March 5, 2016

4.1128 - Thiruvirunthu Padal - கல்மனம் கரைய கண்களும் பனிக்க

Starting Note: G            Scale: Cm

   Cm                             Gm        Cm
கல்மனம் கரைய கண்களும் பனிக்க 
    Cm                  Fm             Cm
கைகளைக் குவித்தேன் இறைவா 
  Eb                  Bb         Cm
என் மனம் வருவாய் இறைவா (2)

        Gm              Cm        Bb               Cm
1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து 
       Bb               F                Cm
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு 
      Eb             Bb              F           Eb
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய 
   Eb                 Cm         F         
இன்னருள் தருவாய் இறைவா 
   Cm              F            Cm        

இன்னருள் தருவாய் இறைவா 
   Cm                             Gm        Cm
கல்மனம் கரைய கண்களும் பனிக்க 
    Cm                  Fm             Cm
கைகளைக் குவித்தேன் இறைவா 
  Eb                  Bb         Cm
என் மனம் வருவாய் இறைவா

2. பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர் 
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும் 

அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2


Friday, February 12, 2016

4.0346 - Thiruvirunthu Padal - அகவிருந்தாக என் இறைவா வா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0346.htm
Starting Note: D            Scale: G

    G                             C    G
அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
                    Em                    C           G     D  G
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2)


      G             Bm          Am              G
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
     D                                             G
ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2)
   C              Am          C               G
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை
 Am       C     D                G
உமதுடலென நீ மாற வைத்தாய்


2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2)
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்